உக்ரைனை வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான வெற்றி !
04.07.2021 09:52:17
2020 ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் உக்ரைனை வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
ரோமில் இடம்பெற்ற இப்போட்டியில் ஆட்டம் தொடங்கி 4 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஹரி கேன் முதலாவது கோலை அடித்தார்.
இதனை அடுத்து விறுவிறுப்பாக தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 46 ஆவது நிமிடத்தில் ஹரி மாகுவேர் மற்றுமொரு கோலை அடித்தார்.
பின்னர் மீண்டும் 50 ஆவது நிமிடத்தில் ஹரி கேன் அடுத்த கோலையும் 63 ஆவது நிமிடத்தில் ஜோர்டான் ஹென்டர்சன் இறுதி கோலையும் அடிக்க இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
குறித்த வெற்றியை அடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறும் அரையிறுதி போட்டியில் டென்மார்க் அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.