நயினார் நாகேந்திரனை கைது பண்ண தில் இருக்கா?!

21.10.2026 15:22:48

தாராபுரம் இடைத்தேர்தலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் நாதகவின் முக்கிய நிர்வாகி காத்திகா நேற்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல், திமுக விழாவில் திமுக கவுன்சிலர் முதல்வர் ஜோசப் விஜயை பற்றி மிகவும் அவதூறாக பேசியதையடுத்து அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இது தொடரபாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கனிமொழி எம்.பி ‘முதலமைச்சர் மனம் நோகும்படி எது நடந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது நடக்கிறது.. பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வரை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதற்கு தைரியம் இருக்கிறதா?..

ஆனால், எதிர்கட்சியில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைதான் கார்த்திகாவின் கைது.