இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

16.09.2025 07:59:55

கிராண்ட் சுவிஸ் செஸ் (Grand Swiss Chess) தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த சாதனை படைத்த வைஷாலிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை எனவும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில்(Speed ​​Skating Championship) தங்கம் வென்று வரலாறு படைத்த இந்தியாவின் ஆனந்த்குமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில் இவர்களது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் எனவும் அவர்களது அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.