‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் திறந்து வைப்பு.
28.08.2026 08:17:15
2023ஆம் ஆண்டு பண்டாரவளை, பூனாகலை, கபரகலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதா புரம்’ வீட்டுத் திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தர குடியிருப்புகளை வழங்கும் நோக்கில் இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.