தடுப்பூசியின் முக்கிய துவம் குறித்து சிதம்பரம் ருவிட் ! - கொரோனா தொற்றின் இரண்டாவது அலை

09.04.2021 09:42:09

 

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில்,  தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக முக்கியம் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “ கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது.

எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  முகக்கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக்கொள்வது அதை விட மிக முக்கியம்.  தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்