கனடாவில் மளிகை விற்பனை துறையில் மாற்றம்!
கனடாவில் மளிகை பொருள் விற்பனை துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் சனத்தொகை பரம்பல்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இவ்வாறு பொருள் விற்பனை மாற்றமடைந்துள்ளது. கடந்த காலங்களில் நத்தார் பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் தற்பொழுது மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
கனடாவின் மொத்த சனத்தொகையில் சுமார் 450 இன மற்றும் கலாச்சார அடிப்படைகளைக் கொண்ட சமூகங்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. தென்னாசியா, சீனா, கருப்பினத்தவர்கள் போன்றவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 16 வீதமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜைகள் சுமார் ஒரு மில்லியன் பேர் கனடாவில் வசித்து வருவதாகவும், ஒன்று தசம் மூன்று மில்லியன் பேர் இந்தியர்கள் எனவும் ஒன்று தசம் ஏழு மில்லியன் பெயர் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் கலாச்சாரங்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மளிகை பொருள் விற்பனை துறையிலும் மாற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. |