தடுப்பூசி மறுப்பவர்களுக்கு வரி: சுவிட்சர்லாந்

03.12.2021 10:08:44

 

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி மறுப்பவர்களிடம் இருந்து பொதுநலன் கருதி வரி வசூலிக்க வேண்டும் என அரசியல் கட்சி ஒன்று கோரிக்கை வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Operation Libero என்ற அரசில் கட்சியே, தடுப்பூசி மறுப்பவர்களிடம் இருந்து வசி வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

குறித்த கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான Sanija Ameti செவ்வாய்க்கிழமை முன்னெடுத்த கூட்டம் ஒன்றில் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி மறுப்பவர்கள் அவர்களின் முடிவுக்கான விலையை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதே பொதுமக்களின் நலன் கருதி மட்டுமே என்பதால், தனிப்பட்ட காரணங்களால் அதை மறுப்பவர்கள் கண்டிப்பாக அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களால், மூன்றாவது நபருக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதனால் அவர் மட்டுமின்றி அவருக்கு சுற்றும் இருப்பவர்களும் நோய்வாய்ப்படலாம்.

மது வாங்கும் ஒருவர் எவ்வாறு அதற்குரிய வரியையும் செலுத்துகிறாரோ, அது போலவே தடுப்பூசி மறுப்பவர்களும் அதற்கான விலையை செலுத்த வேண்டும். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பதால், மறைமுகமாக சுகாதாரத்துறையின் சேவையை வீணடிக்கின்றீர்கள் என Sanija Ameti சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் தான் கிரேக்கத்தில் 60 வயது கடந்த முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால், அவர்களுக்கு மாதம் 100 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அந்த நாட்டின் பிரதமர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.