பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்.. சமந்தா காட்டம்

05.08.2023 18:51:56

நடிகை சமந்தா சமீபத்தில் இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சமந்தா தற்போது மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுக்கவுள்ளதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சமந்தா இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் மயோசிட்டிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ரூ.25 கோடியை கடனாகப் பெற்றுள்ளதாக தகவல் பரவி வந்தது. சமந்தா பதிவு இந்நிலையில், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து சமந்தா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மயோசிட்டிஸ் சிகிச்சைக்கு ரூ.20 கோடியா? நான் அதில் சிறிய தொகையைதான் எனது சிகிச்சைக்காக செலவு செய்கிறேன். என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். ஆயிரக்கணக்கானோர் மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இதுபோன்ற தகவல்களை பகிரும்போது பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.