லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால தொடர் இன்று ஆரம்பம்!
05.12.2021 12:21:14
லங்கா பிரீமியர் லீக்கின் தொடரின் இரண்டாவது பருவகாலதிற்கான முதல் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
5 அணிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்த தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அதன்படி இன்றிரவு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியும் மோதவுள்ளன.
கடந்த ஆண்டு சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்த ஜப்னா கிங்ஸ் அணி இந்த ஆண்டும் மிகவும் பலமான அணியாக தங்களை இரண்டாவது பருவகாலத்துக்கு ஆயத்தப்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த தொடரை பார்வையிட 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.