அன்பில் மகேஷுக்கு முதல் வகுப்பு சிறை!.

27.10.2026 08:40:33

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் செயல்பட்ட தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கிறிஸ்துவ பள்ளிகள், சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பல பள்ளிகளிலும் சான்றிதழ் கொடுப்பதற்காக கட்சி நிதி என்கிற பெயரில் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்கு தொடரப்பட்டது.
 

 

கடந்த செப்டம்பர் 16ம் தேதி அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதையடுத்து அன்பில் மகேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அன்பில் மகேசை கைது செய்தனர். இந்நிலையில், அன்பில் மகேஷுக்கு முதல் வகுப்பு சிறை வசதி வழங்க வேண்டும்.. உடல்நிலைக்கு ஏற்ற உணவு அளிக்க வேண்டும் என ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.