நடிகர் சூர்யாவும், விஜயும் வாடா போடா நண்பர்கள். ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். சூர்யா அறிமுகமானது கூட விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில்தான். ஆனால், சினிமாவில் இருவரும் இருவேறு பாதைகளில் பயணித்து தங்களை வளர்த்துக்கொண்டவர்கள். விஜயின் வளர்ச்சியை பார்த்து சந்தோசப்படும் நபர்களில் சூர்யா முக்கியமானவர். ஆனால், இது தெரியாமல் விஜய் ரசிகர்கள் சூர்யாவை மிகவும் மோசமாக சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில்தான், சூர்யாவின் நடிப்பில் உருவான சீன் திரைப்படம் வருகிற 6ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சூர்யா தனது பதவியை ராஜினாமா செய்வது போல ஒரு காட்சி வருகிறது. அப்போது போலீஸ் அதிகாரி லால் ‘நீ இப்போ கெரியரோட உச்சத்துல இருக்க.. ராஜினாமா பண்ணிட்டு என்ன பண்ணப்போற?’ என கேட்க, சூர்யாவோ ‘பாலிடிக்சில் சேரப்போறேன்’ என சொல்கிறார். விஜயை மனதில் வைத்துதான் இந்த காட்சியை இயக்குனர் உருவாக்கியிருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
விஜய் ரசிகர்களிடம் இந்த காட்சி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.