
இன்று மாலை 5 மணியளவில் உரையாற்றவுள்ள பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடி தனது உரையில் ஜிஎஸ்டி 2.0 பற்றிய புதிய சீர்திருத்தங்கள் மற்றும் H1-B விசா கட்டண உயர்வு தொடர்பான அரசாங்க நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னதாக 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளில் வசூலிக்கப்பட்ட வரி, இனிமேல் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகளுக்கு மட்டுமே குறைக்கப்படும். இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீர்திருத்தங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.