இந்தியாவுக்கு வரும் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

28.11.2025 13:51:49

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் 4ம் திகதி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2025 டிசம்பர் 4 மற்றும் 5ம் திகதிகளில் இந்தியாவுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

இந்த செய்தியை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த சந்திப்பில் புடின் - மோடி இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியாவுக்கு வரும் ரஷ்ய தலைவர் புடினை வரவேற்று ராஷ்டிரபதி பவனில் விருந்தளித்து கெளரவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு சீரற்ற நிலையில் இருக்கும் நிலையில் இந்த உயர்மட்ட சந்திப்பானது கவனம் பெற்றுள்ளது.