தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு டிஜிட்டல் அட்டை
08.10.2021 14:46:01
முழுமையாகத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டையைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
குறித்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக, முழுமையாகத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட, வௌிநாடுகளுக்குச் செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்காகக் குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.