30 போத்தல் கசிப்புடன் இளம் யுவதி கைது

03.09.2021 07:24:03

மட்டக்களப்பு வாழைச்சேனை  காவற்துறை பிரிவிலுள்ள ஓமனியமடு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி ஒருவரை 30 போத்தல் கசிப்புடன் நேற்று வியாழக்கிழமை (2) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு குறித்த பகுதியிலுள்ள வீட்டை காவற்துறையினர் முற்றுகையிட்டனர் இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 22 வயதுடைய இளம் யுவதி ஒருவரை கைது செய்ததுடன் 30 போத்தல் கசிப்பை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்வரை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்