கருப்பு' திரைப்படத்தை முறியடித்த 'பிளாஸ்ட்' .

19.06.2026 07:55:43

சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெற்றி பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்  

'கருப்பு' திரைப்படத்தின் வசூல் சாதனையை 'பிளாஸ்ட்' திரைப்படம் முறியடித்துள்ளது.

 

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

இருப்பினும் பிளாஸ்ட்' திரைப்படம் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிப்பில், அறிமுக இயக்குநரான சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் வெளியாகி தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன்,மற்றும் அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

 

குறிப்பாக, கேரளாவில் 'கருப்பு' திரைப்படம் மொத்தம் ரூபா14 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில், 'பிளாஸ்ட்' திரைப்படம் ரூபா15 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.