பலியானோர் தொகை 15 ஆக அதிகரிப்பு!
30.11.2024 09:00:00
ரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக 138, 191 குடும்பங்களைச் சேர்ந்த 463, 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.