என்னை பிரபலப்படுத்தாதீங்க.

01.09.2025 07:03:00

நடிகர் அஜித் நடிப்பு தாண்டி கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். 

கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். 

டுபாய் ரேஸ் உள்ளிட்ட போட்டிகளில் இரண்டாவது, மூன்றாவது இடமும் பிடித்தார். 

தற்போது ஜேர்மனியில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். 

அங்குள்ள ரசிகர்கள் அஜித்தை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அப்போது அவர்களிடம் பேசிய அஜித், கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, என்னை பிரபலப்படுத்த வேண்டாம். 

இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். 

இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக, மனரீதியாக கஷ்டப்படுகிறார்கள். 

அவர்களின் கஷ்டங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா வன் கார் ரேஸில் சம்பியன் ஆவார்கள் என்றார். 

எனக்காக அல்ல, இது இந்தியாவுக்காக என்றார். 

அஜித்தின் இந்த பேச்சு வைரலாகி உள்ளது. தன்னை விட கார் ரேஸில் அவர் கொண்ட காதல் எவ்வளவு என்பதை இது வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.