“மதராஸி”.

22.07.2025 07:02:00

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 23 ஆவது திரைப்படம் “மதராஸி”

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு முன்னோட்டம் என்பவற்றை படக்குழு வெளியிட்டது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்களே உள்ளன என்பதை குறிப்பிட்டு படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.