மூன்றாவது டெஸ்ட்: இந்தியா பட்டிங்
25.08.2021 16:22:37
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று லீட்சில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் வீராட் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்..
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 151 ரன்னில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் துவங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. 2வது டெஸ்ட்டில் களமிறங்கிய அதே அணியே இந்த போட்டியிலும் களம் இறங்குகிறது.