லண்டன் தெருக்களில் இந்தி பாடல்களை பாடி அசத்திய இந்திய கலைஞர்

08.08.2023 10:08:47

பாலிவுட்டில் பிரபல காதல் பாடலான பெஹ்லா நாஷா பாடலை பாடகர் விஷ் பாடுகிறார். வீடியோவை பார்த்த பயனர்கள் பாடகர் விஷ்சை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக திகழும் பாடகர் விஷ் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் இந்தி பாடல்களை பாடிய வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பாலிவுட்டில் பிரபல காதல் பாடலான பெஹ்லா நாஷா பாடலை பாடகர் விஷ் பாடுவதை காணமுடிகிறது. அதில் அவரின் மெல்லிசை மற்றும் மனதை மயக்கி இதயத்தை தொடும் படியாக பாடும் அவரின் இசை நிகழ்ச்சியின் வீடியோ பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. லண்டனில் மக்கள் எவ்வளவு சாதாரணமாக அமர்ந்து உதித் நாராயணணின் பாடலை ரசிக்கிறார்கள் என்று பாருங்கள் என்ற தலைப்புடன் விஷ் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்ததில் இருந்து 1 கோடியே 80 லட்சம் பார்வைகளையும், 20 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பாடகர் விஷ்சை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.