சட்டமூலத்தில் மாற்றமா?

09.11.2026 09:05:00

அரசாங்கம் முன்வைத்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் இன்று உயர் நீதிமன்றத்தில் முக்கிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று மீண்டும் ஆரம்பமானது.

 

இதன்போது, சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

 

மேலும், இந்தத் திருத்தங்கள் பாராளுமன்றத்தின் குழுநிலை அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்ததுடன், திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.

 

குறித்த சட்டமூலத்தை எதிர்த்து இதுவரை 26 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.