ஒருங்கிணைப்பு தலைவர் பதவியும் இல்லை
01.12.2024 09:23:06
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். |
ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது. |