சுரேஷ் சாலேக்கு ஆதரவாக கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக போராட்டம்!
08.06.2026 15:04:56
|
பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு நீதி கோரி இன்று காலை 10 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. |
|
நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை சிறைப்படுத்தி ஜனாதிபதி உட்பட சானி அபேசேகர ஆகியோர் பயங்கர வாதியை போன்று செயற்படுகிறார்கள் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அரசியல் தரப்பினர்கள் கலந்து கொண்டனர். |