நேரடியாக களத்தில் சமந்தா பவர்

11.09.2022 10:00:00

சமந்தா பவர்

இலங்கை விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியான சமந்தா பவர் வயல் நிலங்களை சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜா-எலவில் உள்ள வயல் நிலங்களில் விவசாயிகளை சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போது விவசாயப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய சமந்தா பவார், நாட்டில் வழங்கப்படவுள்ள கடன் சலுகைகளுக்கு மேலதிகமாக உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளார்.

உர நெருக்கடி, விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இரசாயன உரங்களை நிறுத்துதல் ஆகியவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.

அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் வயலுக்குள் இறங்கிய புகைப்படங்கள் சர்வதேச ரீதியாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அமெரி்க்காவின் உயர் அதிகாரி ஒருவரின் இவ்வாறான செயற்பாடு பலருக்கு முன்மாதிரியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.