மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்!

31.10.2026 12:41:13

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ். வை. எம். கோமஸ், ஏ. எல். ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ். எஸ். எஸ். பி. டி. எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) பிற்பகல் கையளிக்கப்பட்டன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்தமையினால் வெற்றிடமாக இருந்த பதவிகளுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.