வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு

05.02.2021 08:50:48

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி

* கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

* கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2016ம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடன்களை தமிழக ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.