தமிழ் மக்கள் பலமான கூட்டணியை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்!

05.11.2024 14:00:00

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் பிரேமசந்திரன் திங்கட்கிழமை கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீது இருந்த நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து வருகின்றது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்களை எடுக்காவிட்டால் இவர்கள் ஏனைய கட்சிகளிடமிருந்து ஆதரவு கோரும் நிலை ஏற்படலாம் அவ்வாறு ஆதரவு கோரும் போது ஊழல்வாதிகள் உள்வாங்கப்படலாம் என்று குறிப்பிட்டவர்

தற்போதைய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கக்கூடாது தமிழ் மக்கள் ஒரு பலம் மிக்க அமைப்பாக தமிழ் மக்கள் பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.