கடன்கள், தங்கக் கடன்கள் 25 வீதம் உரைவு.

07.11.2026 13:17:20

இலங்கையில் குடும்ப மற்றும் தனியார் துறையின் கடன் பெற்றுக் கொள்ளல் கடந்த ஆண்டை விடக் குறிப்பிடத்தக்க அளவில் சுமார் 10 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால 'நிதி ஸ்திரத்தன்மை மதிப்பீடு - 2026' (Financial Stability Review - 2026) அறிக்கையின் மூலம் வெளிக்காட்டியுள்ளது.

 

கடந்த 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 14.8 சதவீதமாகப் பதிவான நாட்டின் குடும்பக் கடன் பெறல் விகிதம், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டாகும் போது 25.4 சதவீதம் வரை வேகமாக உயர்ந்துள்ளது. 

 

அதற்கமைய, வருடாந்த அடிப்படையில் குடும்பக் கடன் வளர்ச்சி 10.6 சதவீதக் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

 

மத்திய வங்கி அறிக்கையின்படி, இந்த ஆண்டில் பெறப்பட்டுள்ள ஒட்டுமொத்த குடும்பக் கடன்களின் அதிக சதவீதமான 62.5 சதவீதம் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மூலமாகவே பெறப்பட்டுள்ளது. எஞ்சிய 37.5 சதவீதத் தொகை வங்கிசாரா நிதி நிறுவனங்களால் பெறப்பட்டுள்ளது.

 

இவ்வாறாகப் பெறப்பட்டுள்ள ஒட்டுமொத்த குடும்பக் கடன்களில் பாதியளவு, அதாவது 48.9 சதவீதம், பொருளாதார மற்றும் வர்த்தக மையமான மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளமை ஒரு விசேட அம்சமாகும்.