அவுஸ்திரேலிய அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

29.10.2021 05:21:53

உலகக்கிண்ண இருபதுக்கு20 தொடரின் 22ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு 155 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சரித் அசலன்க 35 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் எடம் சம்பா 12 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணி 155 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.