ரில்வினுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும்!
|
மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான அழுத்தத்தை ரில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்தியா கொடுக்கும் என நம்புகிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். |
|
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் பின்வாங்கி வருவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மாகாணசபை தேர்தலை இந்த வருடம் நடத்துவதாகவே அரசாங்கம் தெரிவித்திருந்தது. அத்துடன் வரவு செலவு திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் மாகாண சபை தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் இருக்கிறோம். என்றாலும் தித்வா அனர்த்தத்துடன் தற்போதைய நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறைந்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் தற்போது மக்கள் விடுதல முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட சிலர் இந்தியாவுக்கு சென்றிருக்கின்றனர். மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இந்தியா ரில்வின் சில்வாவுக்கு ஓரளவு அழுத்தம் கொடுக்கும் என நினைக்கிறோம். அதனால் மாகாணசபை தேர்தலை நடத்தினால் நாட்டின் உண்மைத்தன்மையை மக்களுக்கு காட்ட முடியுமாகும். மேலும் மாகண சபை தேர்தல் இடம்பெறுமாக இருந்தால், நாங்கள் கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம். எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஒரு பாலமாகவே இருக்கிறது. அதனால் கூட்டணி அமைப்பது தொடர்பில் தற்போது நாங்கள் அனைவருடனும் கலந்துரையாடி வருகிறாேம். ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாட எமது கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தலைமையில் குழுவொன்றை ரணில் விக்ரமசிங்க அமைத்திருக்கிறார். அதேபோன்று ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாட என்னை நியமித்திருக்கிறார். அதனால் நாங்கள் அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடி வருகிறோம். இறுதியில் சிறந்தததொரு எதிர்க்கட்சியை அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அத்துடன் கூட்டணி அமைக்கும் விடயத்தில். எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு நாங்கள் முதலாவதாக இணைந்து செயற்பட முயற்சிப்பது ஐக்கிய மக்கள் சக்தியுடனாகும். அதனைத் தொடர்ந்து ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறாேம். |