இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
2021 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ஆரம்பத்தில் இருந்து நியூசிலாந்து அணியின் பந்துவீசிச்சனி எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் சொற்ப ஓடங்களுடன் ஆட்டமிழந்தனர்.
அவ்வணி சார்பாக ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் போல்ட் 3 விக்கெட்களையும் இஷ் சோதி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து 111 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
நியூஸிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டேரில் மிட்செல் 49 ஓட்டங்களையும் மார்ட்டின் கப்டில் 20 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.