தமிழக அரசு உத்தரவு - முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் !
16.03.2021 12:01:10
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாட்களாக 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளது.
இதனால் தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதன்போது முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.