20 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டத்தை அறிவித்துள்ள ஜேர்மனி!

20.12.2024 07:57:18

ஜேர்மனி, தனது Taurus KEPD 350 க்ரூஸ் ஏவுகணைகளின் சீரமைப்பு மற்றும் மேம்படுத்தல் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 2005-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இத்தகைய ஏவுகணைகளின் திறனை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படவுள்ளது. ஜேர்மன் ஆயுதப் படை Bundeswehr, டிசம்பர் 19 அன்று இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை அறிவித்தது.

2025-ஆம் ஆண்டு முதல் இதற்கான செயல்பாடுகள் தொடங்க உள்ளன.

ஜேர்மன் அரசின் BAAINBw கொள்முதல் அமைப்பு இந்த திட்டத்திற்கான உடன்பாட்டை அமைத்துள்ளது. இதன் மூலம் ஏவுகணையின் நீண்ட கால பயன்பாட்டை உறுதிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Taurus KEPD 350 க்ரூஸ் ஏவுகணை சுமார் 1,400 கிலோகிராம் எடையுடன் தயாரிக்கப்படுகிறது.

500 கிலோமீட்டர் வரையிலான தூரத்தை அடையும் திறன் கொண்ட இதன் 480 கிலோகிராம் வெடிபொருள் கொண்டு துல்லியமான தாக்குதலை மேற்கொள்ள முடியும்.

இப்போது ஜேர்மன் விமானப் படையின் Panavia Tornado விமானங்களில் பயன்படுத்தப்படும் இந்த ஏவுகணை, 2030-ஆம் ஆண்டுக்குப் பின் Eurofighter ப்ரோஜெக்டில் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜேர்மனி மற்றும் சுவீடனின் தொழில்துறை நிறுவனங்கள் (MBDA மற்றும் Saab Dynamics) இணைந்து உருவாக்கிய இந்த ஏவுகணை, தென்கொரியா மற்றும் ஸ்பெயின் நாடுகளின் விமானப் படைகளிலும் பயன்பாட்டில் உள்ளது.

இந்த மேம்பாட்டுத் திட்டம், ஜேர்மனியின் பாதுகாப்புத் துறையின் வருங்கால தேவைகளை நிரப்பி, அதன் திறன்களை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.