அன்றாடம் கொலைகள் நிகழும் சிரியா போல கேரள மாநிலம்

24.11.2021 09:54:00

அன்றாடம் கொலைகள் நிகழும் சிரியா போல கேரள மாநிலம் மாறி வருவதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன், சிரியா போல கேரளாவும் கொலைக்களமாக மாறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சிக்கும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு இரகசிய உறவு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சியும் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பொலிஸாரின் மீது இருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்த அவர், கேரளாவின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விளக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.