வவுனியா பொது வைத்தியசாலைக்கு ஒட்சிசன் இயந்திரம் வழங்கி வைப்பு

16.08.2021 16:29:38

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒட்சிசன் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரும், வடமாகாண பிரதம செயலாளருமான சமன் பந்துலசேன, முன்னாள் வடமாகாண சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக ராஜரட்டை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஞானதிலக தேரர் அவர்களின் ஏற்பாட்டில் பிரான்சில் உள்ள சர்வதேச பௌத்த சமய அமைப்பைச் சேர்ந்த வர உபகார சந்திரதேரர் அவர்களினால் வைத்தியசாலை பணிப்பாளர் க.ராகுலன் அவர்களிடம் குறித்த ஒட்சிசன் இயந்திரம் இன்று (16) கையளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திஸாலால் டிசில்வா, வவுனியா காவல் நிலைய காவல் பொறுப்பதிகாரி மானவடு, வைத்திய அதிகாரி மதுரகன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்