மௌனம் காக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலின் (Israel) இராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் மத்திய டெல் அவிவில் (Tel Aviv) உள்ள இராணுவ தலைமையகம் மீது இன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலானது, ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டதாகவும், இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இதேவேளை, லெபனானில் இருந்து வந்த இரண்டு ட்ரோன்களை வடக்கு இஸ்ரேலில் வைத்தே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், எந்த ட்ரோன்களும் மத்திய இஸ்ரேலை அடைந்ததாகவோ அல்லது இராணுவ தலைமையகத்திற்கு அருகில் வந்ததாகவோ அறிகுறிகள் தென்படவில்லை என கூறப்படுகிறது.
டெல் அவிவில் உள்ள இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் மையமாக இருக்கும் இந்த தளம், போர் அமைச்சரவை உட்பட பல இராணுவ நிறுவனங்களின் தலைமையகத்தை கொண்டுள்ளது.
அத்தோடு, இந்த தலைமையகத்தின் மீதான தாக்குதல் அறிவிப்பு தொடர்பில் இஸ்ரேலிய தரப்பில் இருந்து உடனடி கருத்துகள் வெளியிடப்படவில்லை.