அரிசி, பால்மா, சமையல் எரிவாயு தொடர்பில் இன்று தீர்மானம்
24.09.2021 07:13:36
வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு இன்று முற்பகல் 10 மணிக்கு அலரி மாளிகையில் கூடவுள்ளது.
பால்மா விலையை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமையல் எரிவாயு, அரிசி, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பன தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.