திருக்கோவில் உமரியில் காடழிப்பு : நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்  

26.09.2021 12:35:50

அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிலுள்ள உமரி கிராமம் பகுதியிலுள்ள கற்பாறைகளான மலைகளிலுள்ள காடுகளின் மரங்களை வெட்டி தீயிட்டு காடழிப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுக்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உமரி கிராமத்தில் இருக்கும் இந்த கல் பாறைகளுடனான காட்டுபகுதி அரசகாணிகள் ஆகும். களப்பு மற்றும் வட்டிகுளம் பகுதியை அண்மித்த பகுதிகளிலுள்ள கிராமங்களிலுள்ள இந்த கல்பாறைகளான காட்டு பகுதியின் காடுகளின் மரங்களை  சிலர் வெட்டி அதனை தீயிட்டு எரித்து அழித்து நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை சில வாரங்களாக  மேற்கொண்டு வருகின்றனர்.

உமரி கடற்கரை பகுதியிலுள்ள சிலர் தமது  சொந்த காணிகளை தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்து தற்போது  தாங்கள் குடிமனைகளை கட்டி சேனைப்பயிர் செய்கை செய்ய போவதாக இதுவரை சுமார் 10 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த கற்பாறையுடைய காட்டில் எவ்வாறு பயிர் செய்யமுடியும். எனவே பயிர் செய்ய போவதாக என்ற பெயரில்  சிலர் இந்த நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் எனவே இந்த காடழிப்புக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.  

எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே உடனடியாக இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.