இலங்கையின் நடவடிக்கைக்கு WHO பாராட்டு

05.01.2021 09:20:32

 

உலகளவில் ஒப்பிடும் போது நாட்டின் இறப்பு விகிதம் (0.5%) மிகக் குறைவாக இருப்பதாகவும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை சிறப்பாக செயற்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்திலிருந்து கொரோனா தொற்று அதிகரித்துள்ள போதிலும் தற்போது அடையாளம் காணப்படும் நோயாளிகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் கொரோனா தொற்றினால் 200 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் இலங்கையில் 40,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வலுவான பொது சுகாதார நடவடிக்கைகளும் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளும் இதற்கு காரணம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் 215 இறப்புகளுடன் 45,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றும் இலங்கையில் பதிவாகியுள்ளன.

ஏறக்குறைய ஒரு வருடம் முன்பு கொரோனா தொற்று நாட்டில் பரவத் தொடங்கியதிலிருந்து 38,000 இலங்கையர்கள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.