ஆன்லைனிலும் வேட்பு மனு தாக்கல்

08.01.2022 13:03:24

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆன்லைனிலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும்,'கொரோனா பரவலை கருத்திற்கொண்டு வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உ.பி. உட்பட 5 மாநிலங்களில் 690 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தேவைப்படுவோர் ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்யலாம்.ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு மையங்களில் சானிடைசர்கள், மாஸ்க்குகள் தயார் நிலையில் இருக்கும்' என்றார்.