
அதிர்ச்சியில் ‘கூலி’ திரைப்படக்குழு.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்யை தினம் திரையரங்குகளில் வெளியான ‘கூலி’ திரைப்படம், தெளிவான பதிப்புடன் இணையத்தளங்களில் வெளியாகி படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ நேற்று திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘
கூலி’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே ‘கூலி’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.