காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்த போதிலும், அவற்றை அபிவிருத்தி செய்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைந்துவிடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவற்றை மேம்படுத்த ஆர்வமின்றி உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் பேசுகையில், "யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த சில தினங்களாக இடம்பெறவில்லை.யாழ்ப்பாணத்தில் நிலவிய பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக விமான ஓடுபாதையைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டமையால், விமானங்களைத் தரையிறக்க முடியாமல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.விமான நிலையத்தின் ஓடுபாதையில் மின்விளக்குகளைக் கூடப் பொருத்தாமல் வைத்துள்ளார்கள் என்ற விடயத்தை அறிந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.இந்திய வணிகர்கள் அல்லது பெரும் முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக வரக் கூடாது, கொழும்பின் ஊடாகவே வருகை தர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை அறிந்துகொண்டேன்.காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆகியவை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பயன்படக்கூடிய முனையங்களாகும்.அவற்றை மேம்படுத்தக் கூடாது என்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர். இந்த இரண்டு முனையங்களையும் இந்திய அரசு பொறுப்பேற்றுக் கட்டமைக்க உதவ முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே.எல்லா வர்த்தகத் தொடர்புகளும் கொழும்பு வழியாகவே நடக்க வேண்டும் என்ற தென்னிலங்கை நலன் சார்ந்த அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுகின்றனர்.பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளைச் செலவிடத் தயாராக இருந்தும், எவ்வித அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை என்ற விடயத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். அத்துடன், இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் முறையிடுவேன்" எனத் தெரிவித்தார்.