ஜாவாவில் தீ விபத்தால் அழிந்த ஒரு தொழிற்சாலையில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை (22) இந்தோனேசிய காவல்துறை 24 சடலங்களை அகற்றியது.
ஒரு நாள் முன்னதாக, கட்டிடம் முழுவதும் தீ பரவி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் எஞ்சியிருந்த தீப்பொறிகளை அணைக்கப் போராடினர்.
மேலும், காணாமல் போன பல தொழிலாளர்களைத் தேடும் பணி ஞாயிறு இரவு முழுவதும் இடைநிறுத்தப்பட்டது.
செராங் மாவட்டத்தின் சிகாண்டேவில் உள்ள பி.டி. ஃபோனுசா அகுங் முலியா மிட்டாய் தொழிற்சாலையில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
அதன் இணையதளத்தின்படி, இந்தத் தொழிற்சாலை 1981-ல் நிறுவப்பட்ட இந்தோனேசியாவின் யுனைடெட் ஃபேமிலி ஃபுட் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்.
தீ விபத்து தொடங்கி 12 மணி நேரத்திற்கும் மேலாக, தொழிற்சாலையின் பல பகுதிகளில் தீயை அணைப்பதற்காக, நீர்த்தாரை பீரங்கிகளின் உதவியுடன் பதினைந்து தீயணைப்பு வாகனங்கள் களமிறக்கப்பட்டன என்று பான்டென் தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் செயல்பாட்டு அதிகாரி ரிஸ்கி ட்வியாண்டோ கூறினார்.
காவல்துறை, ராணுவம், இந்தோனேசிய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய கூட்டு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்ததாக ஏபி (AP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.