இந்தியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இதுவரை எந்தவொரு முறையான அழைப்பும் வரவில்லை என பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த அவர், தனது பயணம் மாநாட்டில் பங்கேற்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்றும், இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், அதற்கான முறையான அழைப்பும் நடைமுறைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெல்லியில் நடைபெற்ற SCO மாநாட்டின்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்தவொரு முறையான இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட இராணுவ மோதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.