மாவீரர் வாரத்தையொட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன் சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது சிறிநேசன் எம்.பி. தெரிவிக்கையில்,
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் போராடி தமது உயிரை ஈகை செய்த மாமறவர்களுக்கு இந்த இடத்தில் அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன் என்றார்.