பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அதைவிட ஆபத்தான புதிய சட்டத்தைக் கொண்டு வராமல், அதனை முழுமையாக நீக்க அல்லது செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜி.எஸ்.பி வரிச்சலுகை இழக்கப்பட்டால், இலங்கையின் 14 பில்லியன் டொலர் ஏற்றுமதியில் 35 சதவீத பங்கைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீத வரி உயர்வடையக் கூடும் அபாயம் ஏற்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.வெளிநாட்டு அமைச்சின் பிரதான நிதி ஒதுக்கீட்டில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்றாலும், போதிய நிதி வழங்கப்படாமையால் உற்பத்தித்திறன் குறைவாகவே உள்ளது. செலவுக்கு ஏற்ற பெறுமதி கணக்காய்வை முன்னெடுத்து தேவையற்ற தூதரகங்களை மூடிவிட்டு, அத்தியாவசியமானவற்றுக்கு முழுமையான நிதியை வழங்க வேண்டும். ஜோர்தான் போன்ற சிறிய நாடுகளுக்கான பதவிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, சீனா , ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய முக்கிய நாடுகளுக்கான தூதர் பதவி ஏன் இன்னும் வெற்றிடமாக உள்ளனமுன்னாள் வெளிநாட்டு அமைச்சர் என்ற வகையில், லக்ஷ்மன் கதிர்காமர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களைப் போல, வெளிநாட்டு சேவையை அரசியல்மயமாக்கலில் இருந்து விடுவித்து திறமையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும்.அமைச்சரின் சர்வதேச ரீதியான செயற்பாடுகளைப் பாராட்டுவதுடன், உலகப் பொருளாதாரத்தில் இலங்கைக்கு உரிய பங்கைப் பெற்றுக்கொள்ள வணிக இராஜதந்திரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.இலங்கையின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும், இரண்டு ஆண்டுகால விண்ணப்ப அவகாசம் வழங்கப்படுவதாகவும் என்பது சலுகை கிடைப்பதற்கான சட்டபூர்வ உத்தரவாதம் அல்ல,பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அதைவிட ஆபத்தான புதிய சட்டத்தைக் கொண்டு வராமல், அதனை முழுமையாக நீக்க அல்லது செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜி.எஸ்.பி வரிச்சலுகை இழக்கப்பட்டால், இலங்கையின் 14 பில்லியன் டொலர் ஏற்றுமதியில் 35 சதவீத பங்கைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீத வரி உயர்வடையக் கூடும் அபாயம் ஏற்படும்.2027 ஜனவரி 1 முதல் இந்தியாவின் 98 சதவீத ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் 0 சதவீத வரிச் சலுகை கிடைக்கவுள்ளதால், இலங்கைக்குக் கடும் போட்டி ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது.இந்தியாவுடனான மீனவர் பிரச்சினையை முழுமையாக இராஜதந்திர ரீதியாகவே தீர்த்துக் கொள்ள வே ண்டும்.மீனவர் முரண்பாடுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்காதுசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த போதிலும், பழமையான ஹோட்டல்கள் மற்றும் விமான நிலைய உட்கட்டமைப்புக் குறைபாடுகளால் இலங்கை குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் வருமானம் 8- 9 சதவீதம் அளவில் குறைவடைந்துள்ளது. குறைந்த சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு 6.1–7.5 பில்லியன் டொலர் ஈட்டும் மாலைதீவுடன் ஒப்பிடுகையில், இலங்கை சுமார் 3 பில்லியன் டொலர் மட்டுமே ஈட்டுகிறது. ஆகவே நடைமுறைக்கு சாத்தியமான வகையில் அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.