கடந்த அரசாங்கம் பணம் அச்சிடுவதாகவும் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதாகவும் குற்றம் சுமத்திய தற்போதைய அரசாங்கம், இப்போது பணம் அச்சிடவும் இல்லை, கடன் பெறவும் இல்லை என்றால், பணவீக்கம் எவ்வாறு அதிகரிக்கிறது எனப் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்காக அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்

வட்டி வீதம் வரவு செலவுத் திட்டத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், வரவு செலவுத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன்இ இலங்கை மத்திய வங்கியும் சரியான முன்கணிப்புகளை மேற்கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட வேண்டும். 

மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட அட்டவணையொன்று இருப்பதாகவும், அதனைத் தன்னால் முன்வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளைஇ நாட்டிற்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் சிறந்ததொரு செயற்பாடாகும். 

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிகள் விதிக்கப்படுகிறது. அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பிரச்சினைகள் நிலவுவதாகச் சுட்டிக்காட்டிய அவர் அரச நிறுவனங்களுக்கு வாகனங்கள் தேவையில்லை என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் என்னவானது.

மேலும் நாட்டின் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை ஏனைய நாடுகளுடன் ஒப்பிட முடியாது என்றார்.