2026-ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஒக்டோபர் வரை) நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு துறைகளினதும் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 14.41 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 6.03% வளர்ச்சியாகும்.நாட்டின் ஏற்றுமதித் துறையின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் இந்த வளர்ச்சிக்கு, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதித் துறைகளின் நேர்மறையான பங்களிப்பே காரணமாக அமைந்துள்ளது.இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, பொருட்கள் ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டின் 11.36 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 5.72% அதிகரித்து 12.01 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேம்படுத்துதல், புதிய சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பன்முகப்படுத்துதல் மற்றும் அதிக பெறுமதி கொண்ட வளர்ந்து வரும் ஏற்றுமதித் துறைகளை ஊக்குவித்தல் ஆகியவையே இந்த வெற்றிக்குப் பிரதான காரணங்களாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.