ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டம் வரை பன்முகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் உயர் சேவைச் செயற்திறனை வெளிப்படுத்திய மத்திய மாகாண பிரதேச செயலகங்களைப் பாராட்டும் "மெஹெவர பெசசும" (சேவைப் பாராட்டு) நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு, சபாநாயகரும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினருமான வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (29) பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தில் நடைபெற்றது.
இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் மிகச் சிறந்த சேவையை வழங்கிய பிரதேச செயலகங்களாக முதலாம் இடம் கண்டி கடவத்சத்தர மற்றும் கங்கவட்ட கோரளை பிரதேச செயலகத்திற்கும், இரண்டாம் இடம் யட்டிநுவர பிரதேச செயலகத்திற்கும், மூன்றாம் இடம் உடுநுவர பிரதேச செயலகத்திற்கும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
மாத்தளை மாவட்டத்தில் மிகச் சிறந்த சேவையை வழங்கிய பிரதேச செயலகங்களாக முதலாம் இடம் கலேவெல பிரதேச செயலகத்திற்கும், இரண்டாம் இடம் மாத்தளை பிரதேச செயலகத்திற்கும், மூன்றாம் இடம் உக்குவெல பிரதேச செயலகத்திற்கும் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டன.
அதேபோன்று, நுவரெலியா மாவட்டத்தில் மிகச் சிறந்த சேவையை வழங்கியமைக்காக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முதலாம் இடமும், நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு இரண்டாம் இடமும், தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர ஹர்ஷண திசாநாயக்க, ஈ.எம்.பஸ்நாயக்க மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் மத்திய மாகாண மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.